இந்த உலகில் பல மக்கள் வேதனைப்படுகிறார்கள்.. சிலருக்கு எல்லாம் இருக்கிறது (உதாரணம் : பணம், அந்தஸ்து, புகழ், நிம்மதி, நோயில்லா வாழ்க்கை , இரட்சிப்பு )
ஆனால் இன்னும் சிலருக்கு பணமும் இல்லை நோய்களும் அதிகம் நிம்மதியும் இல்லை அந்தஸ்தும் இல்லை.. எதுவுமே இல்லை
இது ஏன் ?
மனதுக்குள் பல கேள்விகள் உண்டாகிறது.. எங்கள் அயலில் உள்ள ஒரு வயதான அம்மாக்கு பிள்ளைகளும் அவர்களை கவனிப்பதில்லை, இருக்க ஒரு வீடு இல்லை, பணம் இல்லை, மேலும் அவர்களுக்கு சரீரத்தில் பல நோய்கள் (கேன்சர், நீரிழிவு)
இப்படி ஏன் நடக்கிறது? நாமே இவைகளை பார்த்துக்கொண்டு இருக்க முடியாத பட்சத்தில் இரக்கமுள்ள தேவன் இவைகளை எப்படி பார்க்கிறார்?
ஏசாயா 33:1நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.
அதாவது கை கால்கள் நன்றாக இருக்கும்போது அநேகர் ஆடாத அடடமெல்லாம் ஆடுகிறார்கள் இறுதியில் அவர்கள் கைகால்கள் வலுவிழந்து அடங்கிப்போகும்போது அவர்கள் செய்ததின் பலன் திரும்பி கிடைக்கிறது.
நமக்கு அதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது ஆனால் பூமியில் செய்ததன பலனை பூமியிலேயே அனுபவித்து முடித்தால்தான் மரித்த பிறகு ஒரு கொடூரமான இடத்துக்கு போவதை தவிர்க்க முடியும்.
எனவே பிறரின் வேதனையை பார்த்து பரிதபிக்கும் நாம் நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்து அவர்களின் துயரங்களை குறைக்க முயல்வோம் மற்றபடி நிர்ணயிக்கப்பட்ட்து நடந்தே தீரும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சிஸ்ட்டர் நான் கடந்த 28 வருடத்தில் கஷடம் மற்றும் துன்பங்களுக்கு காரணம் என்னவென்பதை தெளிவாக அறிந்துகொண்டுள்ளேன்.
I யோவான் 3:4பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
என்ற வசனம் 100% உண்மையானது.
இப்படி நியாயப்பிரமாணத்தின் எந்த ஒரு சிறு பகுதியை மீறினாலும் அதற்க்கு துன்பம் உண்டு.
நல்லவன் என்பது வேறு நியாயப்பிரமாணத்தை சரியாக கைக்கொண்டு நடப்பது என்பது வேறு.
தீயவன் ஒருவரான நியாயப்பிரமாணத்தை மீறினால் அதை பிசாசு பெரிதாக எடுத்துகொள்ளாது ஆனால் நல்லவன் ஒருவன் நியாயப்பிரமாணத்தை மீறும்போது அதற்க்கு அதிக தண்டனை கிடைக்கிறது.
மேலும் நியாயப்பிரமாணம் என்பது 10 கற்பனை மட்டுமல்ல அதனோடு கூடிய நீதி நியாயங்கள் எல்லாமே. அடக்கம். இன்னும் அநேக மைனுடான விஷயங்களும் அதனுள் உள்ளது
நான் நியாயப்பிரமாணத்தை ஊக்குவிக்க இதை சொல்லவில்லை மாறாக உண்மை என்னவென்பதை சொல்கிறேன்.
நியாயப்பிரமானத்தால் மாத்திரம் ஒருவன் பரலோக தகுதியை பெறமுடியாது ஆனால் பூலோக துன்பங்களுக்கு நியாயப்பிரமாணம் மீறப்படுவதே காரணம் அன்றி வேறெதுவும் இல்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)