இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு கிறிஸ்து


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
இயேசு கிறிஸ்து
Permalink  
 


அனைவருக்கும் வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இன்று என்னுடைய கேள்வி, கடந்த ஒரு மாதமாக எனக்கும் என் நண்பருக்கும் இடையே ஒரு வாக்குவாதம். எப்படி என்றால், வாட்ஸ்அப் மூலமாக. 

அதாவது அவர் ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர். ஆனால் அவரை குமாரன் என்று நம்புகிறார். இயேசுவை நாம் விசுவாசிப்பது போல, அவரே கடவுள் என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். மேலும் வேதத்தில் அவர் கடவுள் என்பதற்கு வசன ஆதாரம் எதுவும் இல்லை. ஏன் நீங்கள் இயேசுவை கடவுள் என்று நம்புகிறீர்கள் என்று கேட்கிறார்? அதேபோல் திரித்துவம் இல்லை என்றும், பவுல் அப்போஸ்தலனுடைய நிருபங்களை நம்ப தேவையில்லை என்றும் சொல்கிறார். 

இதற்கு தகுந்த பதில் என்ன கூறுவது? தங்களின் மேலான ஆலோசனையை பெற காத்திருக்கிறேன். 

Praise God. __________________


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

ஏன் இவ்வளவு தாமதம் என்று எனக்கு தெரியவில்லை. இது ஒரே சாதாரண கேள்வி என நினைத்தேன். ஆயினும் நன்றி.

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அருமையான சகோதரரே! கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள் 

உங்கள் நண்பருக்கு இந்த வசனங்களை ஆதாரமாக வழங்குங்கள் 

ஒரே தேவன் மூன்று ஆள்தத்துவங்களாக செயல்படுகிறார்

யோவான் 1:

1: ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

14:அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

மேலும் பிதா குமாரனை நோக்கி, எபி 1:

8குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
9நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப் பார்க்கிலும் உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;
10கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
11அவைகள் அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகும்;
12ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
13மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?

இவைகள் ஒரே தேவனின் நிலைகளை குறிக்கிறதுஆண்டவர் இயேசு சொல்லும்போது 

16. நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்

ஒரே தேவனின் ஒரு ஆள்தத்துவம் தான் இயேசு எனவே அவரை பிதாவே தேவன் என்று கூறுகிறார்

 

மேலும் நம் இஷ்டத்துக்கு வேதத்தில் உள்ள பகுதிகளை ஒதுக்க முடியாது எனவே பவுல் எழுதிய நிரூபங்களையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் 


நீங்கள் பரிசுத்த தேவனின் பல்வேறு நிலைகள் தலைப்பில் உள்ள கேள்விகளையும் பதில்களையும் வாசியுங்கள் உங்கள் கேள்விகளுக்கு மேலதிக பதில் கிடைக்கும்__________________


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

நன்றி அக்கா!
நீங்கள் நேரமெடுத்து எனக்கு பதில் கூறியுள்ளீர்கள்.

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Its ok Brother

__________________


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

சுந்தர் அண்ணன் ஏன் வரவில்லை?
உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரியுமா?

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அவர் கடந்த மூன்று நாட்களாக தான் தளத்திற்கு வரவில்லை போலிருக்கிறது வேலைப்பளு அதிகம் என்று கூறி இருந்தார்.. சீக்கிரம் வருவார் என நானும் எதிர்பார்க்கிறேன்.

__________________


இளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

நல்லது! அவரது பதிவுகள் அநேகருக்கு மிகுந்த பிரயோஜனமாக இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தையை கேட்டு செய்கிறவர். நல்ல மூத்த சகோதரர்.
தங்கள் பதிலுக்கு நன்றி!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

அன்பான கர்த்தருடைய பிள்ளைகளுக்கு ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
 
தங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி.  
 
இந்த கொரானாவுக்கு பிறகு என்னால் தாங்கள் எழுத்துவதற்கு பார்க்க மட்டும்தான் நேரம் இருக்கிறது கர்த்தரிடம் விசாரித்து ஒரு காரியத்தை எழுத்தை நேரமில்லாமல் இருக்கிறது. விசாரித்த பதிலைகூட எழுத முடியவில்லை மன்னிக்கவும் 
 
விரைவில் இந்த தடைகள் நீங்கும் என எதிர்பார்க்கிறேன்.
 
கர்த்தர் நிமயித்துள்ள எந்த கடமையையும் காலம் வரும்வரை நானாக நிராகரிக்க விரும்பாத காரணத்தால் இப்படி இருக்கிறது  
 
விரைவில் இந்த தடைகள் நீங்கும் என கர்த்தருக்குள் எதிர்பார்க்கிறேன்.

 

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

Welcome Sundar Anna..

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

இயேசு கிறிஸ்து தேவன் சர்வ வல்லமை உள்ளவர். வெளி 1:8

பிரியமானவர்களே பழைய ஏற்பாட்டில் பணிந்து கொள்ள பாத்திரரும், வழியும் சத்தியமுமானவரும் அதிசயங்களை செய்கிறவரான ஒரே தேவனாகிய ஆண்டவராகிய யேகோவா தேவன் என்று வேதம் சொல்கிறது. இதோ வேத ஆதாரம்

**********************************************************
சங்கீதம் 86:8-12
8. ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

9. ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.

10. தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

11. கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.

12. என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.அப்படியே புதிய ஏற்பாட்டில் நிகரில்லாத தேவனும் (1கொரிந்தியர் 8:6)
ஜாதிகள் பணிந்து கொள்ளப்பாத்திரரும் (மத்தேயு 28:9)
அதிசயங்களை செய்கிறவரும் (அப்போஸ்தலர்10:38 )
சத்தியமும் வழியுமானவரும்(யோவான் 14:6)
ஆண்டவருமாய் இருக்கும் (யோவான் 13:13-14) இயேசு கிறிஸ்துவே ஒரே ஆண்டவராக இருக்கும் யேகோவா தேவனாகிய இயேசு கிறிஸ்து என்றும் அறிந்து கொள்ளுவோம்.

இயேசு பணிந்து கொள்ளப்பாத்திரர் என்றும் அறிந்து கொள்ளுவோம். ஆமென்
-----------------------------------------

9. அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

மத்தேயு 28:9

8. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

9. மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

10. இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:

11. கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

வெளி 4:8-11-- Edited by t dinesh on Tuesday 9th of August 2022 08:58:07 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESHஇளையவர்

Status: Offline
Posts: 30
Date:
Permalink  
 

தங்கள் வருகைக்கு நன்றி. தங்கள் பதிலுக்கு நன்றி! கர்த்தர் தாமே உங்களை இன்னும் பலப்படுத்துவாராக!!

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

pounds1484 wrote:

அனைவருக்கும் வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இன்று என்னுடைய கேள்வி, கடந்த ஒரு மாதமாக எனக்கும் என் நண்பருக்கும் இடையே ஒரு வாக்குவாதம். எப்படி என்றால், வாட்ஸ்அப் மூலமாக. 

அதாவது அவர் ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவர். ஆனால் அவரை குமாரன் என்று நம்புகிறார். இயேசுவை நாம் விசுவாசிப்பது போல, அவரே கடவுள் என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். மேலும் வேதத்தில் அவர் கடவுள் என்பதற்கு வசன ஆதாரம் எதுவும் இல்லை. ஏன் நீங்கள் இயேசுவை கடவுள் என்று நம்புகிறீர்கள் என்று கேட்கிறார்? அதேபோல் திரித்துவம் இல்லை என்றும், பவுல் அப்போஸ்தலனுடைய நிருபங்களை நம்ப தேவையில்லை என்றும் சொல்கிறார். 

இதற்கு தகுந்த பதில் என்ன கூறுவது? தங்களின் மேலான ஆலோசனையை பெற காத்திருக்கிறேன். 

Praise God. 


 பவுல் அப்போஸ்தலர் வார்த்தைகளை நம்புவதும் நம்பாத்தும் அவரவர் விருப்பம்.

 
ஆனால் தேவனின் தீர்க்கதரிசியாக தானியேல் ஆண்டவராகிய இயேசு குறித்து என்ன சொல்லுகிறார் என்பதை நாம் பார்க்கலாம்  
 
தானியேல் 7: 13. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.
 
தானியேல் 7:14 சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.
 
இந்த மனுஷ குமாரர் யாரென்பது நாம் எல்லோருக்கும் தெரியும் அவரே ஆண்டவராகிய இயேசு.அவர் மறித்து உயிர்த்தது தேவனின் வலது பாரிசத்தில் அமர்ந்தார். 
 
1. அவருக்கு  கர்த்தத்துவம் கொடுக்கப்பட்ட்து 
2. சகல ஜாதிக்காரரும் பாஷைகாரரும் அவரையே செவிக்கும்படி மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்ட்து.
3. அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்தியமானது.
4. அவருடைய ராஜ்ஜியம் அழியாதது.
 
இப்படி சகல மகிமையும் நிறைத்தவரை ஆண்டவர் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது. 
  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard