இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?

வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
Permalink  
 
தேவன் சுகமாக்கிய வியாதி சாட்சி கொடுத்ததன் பின்னரும் மீண்டும் வர காரணம் என்ன?

தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன? 

தேவன் எனக்கு இருந்த பல வியாதிகளை சுகமாக்கி இருக்கிறார்

ஆண்டவர் செய்த அந்த அற்புதங்களை நான் அநேகருக்கு சாட்சியாகவும் அறிவித்து இருக்கிறேன் ஆனால் திரும்பவும் அந்த வியாதியால் பாதிக்கப்படுகிறேன் இதட்கு காரணம் என்ன அண்ணா? 

இதன் நிமித்தம் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று குழப்பம் எழுகிறது ? 

 __________________

வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 
Answer pls anna

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
Permalink  
 
எல்லா கேள்விக்கும் எடுத்த எடுப்பில் பதில் சொல்லிவிட முடியாது  சிஸ்டர்

ஆண்டவர் சொல்லும் சரியான பதிலை அறிந்துகொள்ள சற்று காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

எரேமியாவிடத்தில் ஜனங்கள் சில காரியங்களை கேட்ட்டபோது அவன் உடனடியாக பதில் சொல்லவில்லை   

எரேமியா 42:7 பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று.

அதன் பிறகே அவன் ஜனங்களுக்கு உத்தரவு சொன்னான்.

அதுபோல் சில கேள்விகளுக்கு கர்த்தர் பதில் தர தாமதிக்கலாம் நாம் கொஞ்சம் பொறுத்திருப்பது அவசியம்.   

 __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
Permalink  
 
ஏன் அண்ணா கோவமாக பதில் அளிக்கிறீர்கள்?

கர்த்தரின் பதிலுக்காக காத்திருக்க தயார் நன் நினைத்தேன் நீக்கல் பிஸி யாக இருப்பதால் தான் எழுதவில்லை என்று அதனால் தான் மறுபடி கேட்டேன் ஏனென்றல் இந்த குழப்பத்தின் நிமித்தம் என்னால ஒழுங்காக ஜெபம் பண்ண கூட முடியவில்லை அதனால் தான் கொஞ்சம் அவசரப்படுத்தினேன்.

தவறாயின் மன்னிக்கவும்

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
Permalink  
 
NO கோவம் எல்லாம் இல்லை சிஸ்ட்டர். நீங்களே எதோ துன்பத்தில்  உள்ளீர்கள் உங்களிடம் கோபப்பட என்ன இருக்கிறது.

சில காரியங்களுக்கு கர்த்தர் பதில் தர தாமதமாகிறது என்ன செய்வது?

நீங்கள் கேட்டுருக்கும் கேள்வி சாதாரணமானது இல்லை.  ஏற்ற பதிலை தேவனால் மட்டுமே தரமுடியும் எனவே சற்று பொறுத்திருப்போம் __________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
Permalink  
 
ok anna

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 
Debora wrote:

தேவன் சுகமாக்கிய வியாதி சாட்சி கொடுத்ததன் பின்னரும் மீண்டும் வர காரணம் என்ன?

 தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன? 

 தேவன் எனக்கு இருந்த பல வியாதிகளை சுகமாக்கி இருக்கிறார்

 ஆண்டவர் செய்த அந்த அற்புதங்களை நான் அநேகருக்கு சாட்சியாகவும் அறிவித்து இருக்கிறேன் ஆனால் திரும்பவும் அந்த வியாதியால் பாதிக்கப்படுகிறேன் இதட்கு காரணம் என்ன அண்ணா? 

 இதன் நிமித்தம் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று குழப்பம் எழுகிறது ? 

கடந்த நாளில் உங்கள் கேள்விக்கான பதிலை சிந்தித்துக் கொண்டிருந்தேன் எனக்கும் கூட அதுபோல் சில பிரச்சனைகள் இருப்பதால் மிகுந்த வருத்தத்தோடு ஆண்டவரிடம் பதிலை எதிர்பார்த்திருந்தேன் அப்பொழுது என்னுடைய இருதயத்தில் சொல்லப்படட வார்த்தை புலம்பல் புத்தகத்தில் இருக்கும் வசனம் தான்.
 
புலம்பல் 3:33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
 
என்பதுதான்.
 
பிறகு ஏன் சில நோய்களை நம் வாழ்வில் அனுமதிக்கறார் என்றால்: 
 
39. உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

40. நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
 
41. நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
 
ஆம்! நம் வழிகளில் சில கர்த்தருக்கு ஏற்றதாக இல்லை அதை நாம் அறிந்துகொள்ள கூட முடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம். 
என்பதே நான் அறிந்த பதிலாக இருக்கிறது.
 
ஆகினும் 
 
32. அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். 
 
என்ற வார்த்தை நம்மை ஆறுதல் படுத்துவதாக இருப்பதால் அவர் கிருபைக்காக கெஞ்சுவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
 
இது என்னுடைய முடிவான பதில் இல்லை. இன்னும் மேலானதை  தேவனிடம் எதிர்பார்த்திருக்கிறேன்.    
 
 -- Edited by SUNDAR on Tuesday 14th of February 2023 08:29:06 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 
/////////////////////// ஆம்! நம் வழிகளில் சில கர்த்தருக்கு ஏற்றதாக இல்லை அதை நாம் அறிந்துகொள்ள கூட முடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம்.
என்பதே நான் அறிந்த பதிலாக இருக்கிறது. //////////////////////////

ஏன் எம்மால் அறிந்துகொள்ள முடியாதுள்ளது?

எப்படி எந்த எமது வழிகள் தேவனுக்கு ஏற்றதாக இல்லை என்பதை கண்டு கொள்வது ?

உங்கள் மேலதிக பதிலுக்காக காத்திருக்கிறேன்

__________________

மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
Permalink  
 
உங்கள் கேள்விக்கு இறுதியான விளக்கம் இதுதான் சிஸ்ட்டர் :
 
யோவான் 55. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான்.  
 
யோவான் 5:14  இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
 
மேலேயுள்ள சம்பவத்தின் மூலம் பாவம்தான் ஒரு நோய்க்கு அடிப்படை காரணமாக இருக்கிறது என்பதை அறியமுடியும். 
 
அரசாங்க சடடத்தை தெரிந்து மீறினாலும் தெரியாமல் மீறினாலும் தண்டனை உண்டு அதுபோல் தேவனின் நித்திய சடடத்தை மீறி 
பாவத்தை தெரிந்து செய்கிரோமோ தெரியாமல் செய்கிறோமோ பாவம் பாவம்தான் அதற்க்கு தண்டனை உண்டு.
 
எது பாவம்:
I யோவான் 3:4   நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். 
 
எனவே நியாயப்பிரமாணத்தின் எந்த ஒரு பகுதி மீறப்படடாலும் அதற்க்கு ஏற்றால் போல் ஏதாவது ஒரு சிறிய அல்லது பெரிய வியாதி ஒருவருக்கு நிச்சயம் இருக்கும்.
 
நியாயப்பிரமாணம் முடிந்துபோனது என்று சொன்ன பவுலுக்கு ஒரு கொடிய வியாதி நிரந்தரமாக இருந்ததாக அவரே சொல்கிறார்.
 
II கொரிந்தியர் 12:7   என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது;
 
ஆனால் அவர் மாற்றி யோசித்து அதை எல்லாம் துச்சமாக நினைத்து தேவனுக்காக வாழ்ந்து மரிப்பதையே பெரியதாக எண்ணி செய்து முடித்தார்.
 
உங்களுக்கும் அதே பதில்தான்:
 
வியாதியை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா நியாயப்பிரமாணத்தை கருத்தாக படித்து அதில் தேவனால் பின்னாளில் மாற்றப்படாத கற்பனை கடடளை நீதி நியாயங்களை படித்தறிந்து அவற்றை சரியாக கைக்கொள்ளுங்கள்
 
இல்லையெனில் மாம்சத்தோடு முடிந்துபோகும் வியாதியை துச்சமாக மதித்து ஆவியின் பிரமானத்தில்  ஆண்டவராகிய இயேசுவின் வழியில் தேவனுக்காக வாழ்ந்து மரித்தால் போதும்  வழியில் வாழுங்கள்.   
 
ஆகினும் ஆண்டவர் இயேசுவால் எந்த பாவத்துக்கான தண்டனையையும் நோயையும்  சுகமாக்க முடியும். "தேவனால் எல்லாம் கூடும்"      
 
__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
Permalink  
 
சிறந்த விளக்கம் அண்ணா

மிகவும் நன்றி

மேலும் தேவனால் பின்னாளில் மாற்றப்படாத கற்பனை கட்டளை நீதி நியாயங்கள் எவை ?

அதை எப்படி கண்டறிவது

__________________

வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 
மேலும் தேவனால் பின்னாளில் மாற்றப்படாத கற்பனை கட்டளை நீதி நியாயங்கள் எவை ?

அதை எப்படி கண்டறிவது

__________________

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard