நான் அறியாதததை பற்றி எப்படி எழுதுவது என்பது புரியவில்லை சகோதரி.
ஆவிகளை பகுத்தறிதல் என்றால் என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால்
நம் எதிரே இருந்து பேசுபவர் / அல்லது நமக்கு ஒரு செய்தியை சொல்பவர் ஏன்ன ஆவியை உடையவராக இருக்கிறார் என்பதை பகுத்து அறியும் ஒரு மென்மையான செயல் என்று கருதுகிறேன்.
எல்லா ஆவிகளும் இரண்டு ஆவிகளை தொகுப்பில் அடங்கிவிடும்
1. பரிசுத்த ஆவி அதாவது தேவ ஆவியின் தொகுப்பு
2. அசுத்த ஆவி : சாத்தான் / பிசாசு / கள்ள தீர்க்கதரிசி தொகுப்பு
ஆக மொத்தம் ஒரு வார்த்தையை ஒருவரிடம் இருந்து கேட்க்கும பொது அவர் தேவ ஆவியால் ஏவப்பட்டு பேசுகிறாரா அல்லது அவருக்குள் இருந்து சாத்தான் கிரியை செய்கிறானா என்பதை உடனடியாக அறிந்துகொல்வதுதான் அந்த வரம் என்று கருதுகிறேன்.
இயேசுவிடம் வந்து பேதுரு அவர் மேல் கரிசனை உடையவன் போல் "சிலுவை மரணம் உமக்கு நேரிடக்கூடாதே" ஏற்றது வருத்தமாக தெரிவிக்கிறான்
ஆகினும் அவனுள் இருந்து கிரியை செய்த சாத்தானின் தந்திரத்தை உடனே பகுத்தறிந்த இயேசு "அப்பாலே போ சாத்தனே" என்று சொல்கிறார்.
அதேபோல் சத்துரு எப்போதுமே நமக்கு எதிர்த்டுகொண்டுதான் நிற்பான் என்று நாம் எண்ணிவிட கூடாது நம்மேல் கரிசனை உள்ளவன் போலும் பேசுவான் நமக்காக பரிதாப படுபவன்போலும் பேசுவான் அநேக நேரம் அதில் நாம் மயங்கிவிடுகிறோம்.
என்னால் உடனே அப்படி பகுத்தறிய முடியாது. நான் எல்லாவற்றையும் அப்படியே நம்பி விடுவேன். அவன் பிசாசாக இருந்தாலும் அவனையும் முழுமையாக நம்பிவிடுவேன் ஆனால் தேவ வார்த்தைக்கு மாறாக ஒரு காரியம் செய்ய வரும்போதுதான் எனக்கு அவனைப்பற்றி உண்மை புரியவரும்.
எனவே என்னிடம் அந்த வரம் இல்லை என்று தீர்மானித்துள்ளேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எனக்கு அநேக நேரங்களில் ஒருவரை பற்றி இலகுவாக அறிய முடிகிறது அதாவது இன்னார் இப்படிப்பட்டவர் இவர் இந்த நோக்கத்தில் தான் கதைக்கிறார் , இந்த நோக்கத்துடன் தான் செயல்படுகிறார் என்றெல்லாம் அறிந்து கொள்கிறேன். சிலரை பற்றி சிலர் தவறாக கூறினாலும் அவர் இப்படி பட்டவர் இல்லை என்று எனது ஆழ்மனது சொல்கிறது.
உதாரணமாக : கடந்த மாதங்களில் என்னுடைய அலுவலகத்தில் புதிதாக வந்த ஒருவர் என்னுடைய இடத்தை பிடிக்க முயல்வதாக எல்லாரும் என்னிடம் கூறினார்கள் , அதட்கு ஏற்றார் போல எனக்கு சிலகாலம் நிம்மதி இல்லாமல் அலுவலகத்தில் நெருக்கடிகள் வந்தது ஆனாலும் அந்த குறித்த புதிதாக வந்தவர் மூலம் தான் எனக்கு நெருக்கடிகள் வருவதாகவும் என்னுடைய இடத்தை அவர் பிடிக்க முயல்வதாக எல்லாரும் கூறினாலும் என்னுடைய உள்மனது அவர் அப்படி இல்லை என்று சொன்னது .. ஆனாலும் சில மாதத்தில் அவரை எங்கள் உரிமையாளர் வேளையில் நிறுத்தி விட்டார். உரிமையாளரே என்னை புதியவரை வைத்து நெருக்கடிக்குள் தள்ளியதால் தேவன் எனக்காக யுத்தம் செய்து புதியவர் வேளையில் இருந்து நிறுத்தப்பட்டாரா? அல்லது உண்மையில் புதியவர் எனக்கு விரோதமாக செயல்பட்டதால் வேளையில் இருந்து தேவனால் நிறுத்தப்பட்டாரா ? எப்படி என்று புரியவில்லை.
அதேபோல சிலர் பேசும் போதும் செயல் படும் போதும் அவர்கள் செய்யும் நோக்கமும் பேசும் நோக்கம் அறிந்தவுடன் சிலர் மீது கோபமும் சிலர் மீது இரக்கமும் ஏட்படுகிறது.
இது என்ன காரணம் ? இது ஆவிகளை பகுத்தறிகிற அறிவா? இல்லாவிட்டால் என்ன ?